முதல்வரின் உதவியாளர் வீட்டில் வருமான வரி சோதனை! பரபரப்பு தகவல்

முதல்வரின் உதவியாளர் வீட்டில் வருமான வரி சோதனை! பரபரப்பு தகவல்

தமிழகத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனை குறிவைத்து வருமான வரிச்சோதனை நடத்தப்பட்ட நிலையில் மத்திய பிரதேச மாநிலத்திலும் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மபி முதல்வரின் உதவியாளர்கள் இருவரது வீடுகளில் வருமான வரிசோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஹவாலா பணம் மோசடியாக பதுக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இது காங்கிரஸ் மீது குறிவைத்து நடத்தப்படும் சோதனை என்று ராஜீவ் சுக்ல தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் வெற்றியை தடுப்பதற்காகவே இந்த சோதனை நடைபெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply