முதல்முறையாக மலையாளத்தில் கால் வைக்கும் தமன்னா

வைரலாகும் வீடியோ

தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் நடித்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா

இவர் தற்போது முதல் முதலாக மலையாள திரையுலகில் நுழைய உள்ளார். ஆம் மலையாளத்தில் உருவாக உள்ள வெப்தொடர் ஒன்றில் தான் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரின் கதை தனக்கு மிகவும் பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மலையாள இயக்குனர் மிருதுல் எம்.நாயர் அவர்கள் இயக்கவுள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் இந்தத் தொடரில் மூலம்தான் மலையாளத் திரையுலகில் முதல் முதலாக நுழைவதாக தமன்னா குறிப்பிட்டுள்ளார்

தமன்னாவை வரவேற்க மலையாள திரையுலக ரசிகர்கள் தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.