முதலிரவில் மாறிய கணவர்கள்:

 மாமியார் செய்த குழப்பத்தால் மருமகள்கள் அதிர்ச்சி

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு பெண் தனது இரட்டை மகன்களுக்கு இரட்டையர்களாக பிறந்த பெண்களை பார்த்து திருமணம் செய்து பார்த்தார்

திருமணம் நல்லபடியாக முடிந்து முதலிரவுக்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்த போது தனது இரண்டு மருமகள்களிடம் அவர்கள் கணவர் இருக்கும் அறையைக் குறிப்பிட்டு சொல்லி அந்த அறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்

இதனை அடுத்து மருமகள்களும் மாமியார் கூறிய அறைகளுக்குச் சென்றனர். அன்றைய தின இரவு முதலிரவு நல்லபடியாக முடிந்து விட்டது

ஆனால் மறுநாள் காலையில் தான் மணமகளும், மணமகனும் மாறிவிட்ட விபரம் தெரிந்தது. தாலி கட்டிய தம்பதிகளும், முதல் இரவு நடந்த தம்பதிகளும் வேறு வேறு என்பதை அறிந்து இரண்டு ஜோடிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

மணமகன்கள் மற்றும் மணமகள்கள் இருவரும் இரட்டையர்கள் என்பதாலும் முன் பின் அறிமுகம் எதுவும் இல்லாதவர்கள் என்பதாலும் இந்த குழப்பம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது

தற்போது தாலி கட்டிய மணமகளுடன் வாழ்வதா அல்லது முதல் இரவு நடந்த மணமகளுடன் வாழ்வதா என்ற குழப்பத்தில் அந்த இரண்டு ஜோடிகளும் உள்ளனர்

மாமியார் செய்த ஒரு சிறு தவறால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த குழப்பத்தை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் அந்த குடும்பமே திகைப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.