முட்டை விலை மேலும் உயர்வு: எட்டாக்கனியாகிறதா முட்டை?

முட்டை விலை மேலும் உயர்வு: எட்டாக்கனியாகிறதா முட்டை?

கடந்த சில நாட்களாக பொதுமக்களின் அத்தியாவசிய உணவான முட்டையின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில்லறை விலை ரூ.6ஆக இருந்த நிலையில் ரூ.10 வரை உயர வாய்ப்புள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் நேற்று நாமக்கல் முட்டை பண்ணையில் கொள்முதல் விலை ரூ.4.74ஆக இருந்த நிலையில் இன்று திடீரென 42 காசுகள் உயர்ந்து ரூ.5.16ஆக உயர்ந்துள்ளது. இதனால் முட்டையின் சில்லறை விலை ரூ.7 ஆக உயரும் வாய்ப்பு உள்ளது.

இப்படியே உயர்ந்து கொண்டே போனால் முட்டை என்பது ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முட்டை விலை உயர்வால் ஓட்டல்களில் ஆம்லேட் உள்ளிட்ட முட்டை சம்பந்தமான உணவும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.