முடிந்தால் கைது செய்யுங்கள்: ஸ்டாலின் கனிமொழி வீட்டிலும் குடியுரிமை கோலம்:

முடிந்தால் கைது செய்யுங்கள்: ஸ்டாலின் கனிமொழி வீட்டிலும் குடியுரிமை கோலம்:

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கல்லூரி மாணவிகள் கோலம் போட்டதால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று முக ஸ்டாலின், கனிமொழி உள்பட திமுக பிரபலங்கள் பலர் வீட்டின் முன்பு குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலம் போடப்பட்டு உள்ளது

நேற்று கல்லூரி மாணவிகளை கைது செய்தது போல் முடிந்தால் எங்களையும் கைது செய்து பாருங்கள் என்று மறைமுகமாக சவால் விடும் வகையில் இந்த கோலங்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஸ்டாலின், கனிமொழி வீடுகளில் மட்டுமின்றி திமுகவின் முக்கிய தலைவர்களின் வீடுகளிலும், பெரும்பாலான திமுக ஆதரவாளர்களின் வீடுகளிலும் இவ்வாறு கோலங்கள் போடப்பட்டுள்ளது போலீசாருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கோலம் போட்ட மாணவிகளை எளிதாக கைது செய்தது போல் போலீசார் இன்று திமுகவினர்களை கைது செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

Leave a Reply