முக ஸ்டாலின் மிசா கைது குறித்து அமெரிக்க தூதரகத்தின் குறிப்பு!

முக ஸ்டாலின் மிசா கைது குறித்து அமெரிக்க தூதரகத்தின் குறிப்பு!

திமுக தலைவர் முக ஸ்டாலின் மிசாவில் கைதானாரா? அல்லது மிசா காலத்தில் வேறொரு வழக்கில் கைதானரா? என்பது குறித்த விவாதங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஸ்டாலின் மிசாவில் தான் கைதானார் என்பதை நிரூபிக்க திமுக போராடி வருகிறது. அந்த வகையில் இன்று திமுகவின் ஐடி விங் பதிவு செய்துள்ள டுவீட்டில், ‘கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள் மிசாவில் கைதானது பற்றி அமெரிக்க தூதரகம் 02-02-1976 அன்று அனுப்பிய குறிப்பு: முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மகன் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்; இது பிரதமருக்கு எதிரான நடவடிக்கைகளை குறைக்கும் என நம்பப்படுகிறது’ என்று ஒரு டுவீட்டை பதிவு செய்து அதற்கான ஆதார புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளது

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக, ‘காலம் காலமாக சொல்லி வந்த கூற்று தவறு என்றால், அதை மறுக்க தமிழக காவல்துறை, சிறைத்துறை ஆவணங்களை சான்றாக அறிவாலயம் வெளியிடாமல் எங்கோ அமெரிக்காவில் வந்த ஒரு பதிவை சான்றாக அளிப்பது சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்கிறது. இது அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது’ என்று கூறியுள்ளதால் இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என தெரிகிறது.

Leave a Reply