முக ஸ்டாலினே துக்ளக் ரசிகரா? வைரலாகும் புகைப்படம்

முக ஸ்டாலினே துக்ளக் ரசிகரா? வைரலாகும் புகைப்படம்

ஒவ்வொரு ஆண்டும் துக்ளக் ஆண்டு விழா சாதாரணமாகவே நடந்துவிடும். அது ஊடகங்களில் ஒரு பெட்டிச் செய்தியாக மட்டுமே வெளிவரும். ஆனால் இந்த ஆண்டு ரஜினிகாந்த் கலந்து கொண்டதால் அவர் பேசிய ஒரு சில கருத்துக்களால் துக்ளக் இதழ் கடந்த 4 நாட்களாக அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகி உள்ளது

இந்த நிலையில் முரசொலி படித்தால் திமுககாரன், துக்ளக் படித்தால் அறிவாளி என்று ரஜினி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முக ஸ்டாலின் அவர்களே துக்ளக் இதழின் தீவிர ரசிகர் என்றும் அவர் துக்ளக் இதழை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை நெட்டிசன்கள் வெளியிட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது

Leave a Reply