முகினா? லாஸ்லியாவா? ஆழ்ந்த ஆலோசனையில் விஜய்டிவி?

முகினா? லாஸ்லியாவா? ஆழ்ந்த ஆலோசனையில் விஜய்டிவி?

பிக்பாஸ் நிகழ்ச்சின் ஃபைனல் நாளை மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் சீசன் 3, வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி லாஸ்லியாவுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், வாக்குகளின் அடிப்படையில் அவரே வின்னர் என்றும், ஆனால் விஜய் டிவி, முகினை வின்னராக அறிவிக்க திட்டமிட்டு வருவதாகவும், இதுகுறித்து விஜய்டிவி நிர்வாகமும், பிக்பாஸ் குழுவினர்களும் ஆழ்ந்த ஆலோசனையில் இருப்பதாகவும் ஒரு வதந்தி மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

எனினும் இந்த இருவரில் ஒருவர் தான் வின்னர் என்பது 100% உண்மை. இருவரில் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply