மீண்டும் வைரலாகும் ‘தள்ளி போகாதே: இம்முறை அதர்வா

மீண்டும் வைரலாகும் ‘தள்ளி போகாதே: இம்முறை அதர்வா

‘தள்ளி போகாதே’ என்றாலே அனைவருக்கும் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல் தான் ஞாபகம் வரும். ஆனால் தற்போது ‘தள்ளி போகாதே’ மீண்டும் வைரலாகியுள்ளது என்பதும் அதற்கு அதர்வா ஒரு காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆம், அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கிய இந்த படத்திற்கு ‘தள்ளி போகாதே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

‘தள்ளி போகாதே’ படத்தில் அதர்வாவுடன் முதல்முறையாக அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோபி சுந்தர் இசை அமைக்கும் ‘தள்ளி போகாதே’ படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவும் செல்வா படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஏப்ரல் இறுதியில் வெளியாகவுள்ளது.

Leave a Reply