மீண்டும் நீதிபதி ரமணா முன் விசாரணைக்கு வந்த ப.சிதம்பரம் வழக்கு!

ப.சிதம்பரம் முன்ஜாமின் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மாற்றிய நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி என்.வி.ரமணா முன்பு விசாரணைக்கு வந்துள்ளது.

தலைமை நீதிபதி அமர்வு அயோத்தி வழக்கு விசாரணையில் உள்ளதால், ப.சிதம்பரம் வழக்கை விசாரணைக்கு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

ப.சிதம்பரம் தரப்பில் கபில் சிபில் முன்ஜாமின் கேட்டு வாதம் செய்து வரும் நிலையில் முன்ஜாமின் மனுவில் குறைப்பாடுகள் இருப்பதாக நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார். எனவே குறைபாடுகளை களைந்து மீண்டும் மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி ரமணா தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply