மீண்டும் குப்பையாகும் மாமல்லபுரம்: பொதுமக்களுக்கும் பொருப்பு வேணுமே!

சீன அதிபரின் வருகையை அடுத்து கடந்த சில நாட்களாக மாமல்லபுரம் தூய்மையாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் சுகாதாரப் பணியாளர்கள் இரவு பகலாக உழைத்தது மட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்ததும் ஆகும்

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்ரேஏ பல இடங்களில் குப்பைகள் காணப்படுகிறது அரசு ஒவ்வொரு முறையும் குப்பைகளை அகற்றி கொண்டிருக்க முடியாது அரசு சுகாதார பணியாளர்களை வைத்து இருந்தாலும் பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் குப்பைத் தொட்டியில் மட்டுமே குப்பைகளை போட வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும்

இல்லையேல் என்னதான் அரசு தூய்மைப்படுத்தினாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி எந்தவித ஒரு நல்ல திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சுற்றுலா செல்லும் பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது

Leave a Reply