மீண்டும் இன்று நீட் தேர்வு: மாணவ, மாணவிகள் தயார்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நீட் தேர்வை தவறவிட்ட மாணவ மாணவிகளுக்காக இன்று மீண்டும் நீட் தேர்வு நடைபெறுகிறது

கடந்த மாதம் நீட்தேர்வு நடைபெற்ற நிலையில் அன்றைய தினத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலையில் இருந்தது

இந்த நிலையில் அந்த மாணவர்களுக்காக உச்சநீதிமன்றத்தின் வலியுறுத்தல் பெயரில் இன்று மீண்டும் நீட் தேர்வு நடைபெறுகிறது

சுமார் 15 ஆயிரம் பேர் வரை இந்த தேர்வு எழுதுகின்றனர் என்பதும் இந்த தேர்வின் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று தயார் நிலையில் தேர்வு மையத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Leave a Reply