shadow

மின் கட்டணம் செலுத்துவதற்கு மே 30 வரை கால அவகாசம் வழங்கி மின்வாரியம் ஏற்கனவே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது ஜூன் 15 வரை மின் கட்டணம் கட்டி கொள்ளலாம் என மீண்டும் கால அவகாசம் அளித்துள்ளது

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து மே 31-ஆம் தேதிக்குள் மின்கட்டணம் பலரால் செலுத்த முடியாது என்பதால் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

மின்வாரியம் வழங்கிய இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி ஜூன் 15ஆம் தேதிக்குள் மின் கட்டணம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

இருப்பினும் ஆன்லைன் வழியாக மின்கட்டணம் எப்பொழுது வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது