மின்னனு வாக்கு இயந்திரங்களில் என்ன நடக்கிறது? சந்திரபாபு நாயுடு கேள்வி

நேற்று ஆந்திராவில் தேர்தல் நடைபெற்றபோது ஒருசில வாக்குச்சாவடிகளில் மின்னனு வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஆனதால் தேர்தல் கமிஷன் மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்த நிலையில் இதுகுறித்து ஆந்திர முத்ல்வர் சந்திரபாபு நாயுடு கூறியபோது, ‘மின்னனு வாக்கு இயந்திரங்களில் இருக்கும் அசாதாரணமின்மைகள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் பற்றி விவாதிக்க நாளை தேர்தல் கமிஷனை சந்திக்க உள்ளேன். மின்னனு வாக்கு இயந்திரங்களில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை என்று கூறினார்.

ஏற்கனவே வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பல அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply