மிதந்து வரும் பிணங்களை தடுக்க கங்கையில் வலை அமைத்த பீகார் அரசு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிர்கள் இழந்தவர்களை அடக்கம் செய்யாமல் கங்கை நதியில் வீசி இருப்பதாகவும் அவ்வாறு மிதந்து வந்த 71 பிணங்கள் பீகார் வரை வந்ததாகவும் செய்திகள் வெளியானது

இதனை அடுத்து பீகார் மாநில அரசு அதிகாரிகள் அதிரடியாக கங்கை நதியில் ஒரு சில இடங்களில் வலை அமைத்து பிணங்களை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இதுவரை நூற்றுக்கணக்கான பிணங்கள் வலைகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் பீகார் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உடலை அடக்கம் செய்ய நேரம் மற்றும் பணம் இல்லாததால் இவ்வாறு கங்கை நதியில் தூக்கி வீசி படுவதாகவும் இதுகுறித்து உத்தரப்பிரதேச அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பீகார் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது