‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் உரிமையை தயாரிப்பாளரை வாங்கிய புதுமை

‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் உரிமையை தயாரிப்பாளரை வாங்கிய புதுமை

விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஒரு சில ரிலீஸ் உரிமைகளின் வியாபாரம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இன்று தமிழக ரிலீஸ் உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித்குமார் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சன் பிக்சர்ஸ் உள்பட பல நிறுவனங்கள் ‘மாஸ்டர்’ திரைப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற போட்டி போட்டதாக கூறப்பட்ட நிலையில் ‘மாஸ்டர்’படத்தின் இணை தயாரிப்பாளரே இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது புதுமையாக உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கேரளா, கர்நாடகா, தெலுங்கு மாநில உரிமைகளின் வியாபாரம் ஏற்கனவே முடிந்து விட்டது என்பதும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவியும் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனமும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வரும் ஏப்ரல் மாதம் மாஸ்டர் படத்தை பிரமாண்டமாக திரையிட லலித்குமார் திட்டமிட்டு வருகிறார் என்பது என்ற செய்தி வெளியாகி உள்ளது

Leave a Reply