shadow

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது, தியேட்டரில் தான் வெளியாகும் என பலமுறை படக்குழுவினர் விளக்கமளித்தபோதும், இதுகுறித்த வதந்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் மாஸ்டர் படம் ஓடிடியில் விரைவில் ரிலீஸ் என்ற வதந்தி தொடர்கதையாகி வரும் நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பெயரில் போலி டுவிட்டர் பக்கம் ஒன்று மர்ம நபரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போலி டுவிட்டரில் ’மாஸ்டர்’ படம் ஓடிடி வெளியீடு தம்பி விஜய் முடிவை வரவேற்கிறேன் அடுத்த பரிமாணத்தில் திரையுலகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *