மார்பில் பந்து பட்டு இளைஞர் மரணம்: கிரிக்கெட் விளையாட்டின்போது விபரீதம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கிரிக்கெட் பந்து பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் அருகே அகரம் கிராமத்தில் நடைபெற்ற நேற்று ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டியில், விளையாடிக் கொண்டிருந்த சூனாம்பேடு பகுதியை சேர்ந்த சுனில் என்ற இளைஞர் பேட்டிங் செய்தபோத் திடீரென அவரது மார்பு பகுதியில் பந்து பட்டதில், அவர் நிலைதடுமாறி, மைதானத்திலேயே சாய்ந்தார்.

இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply