மார்ச் 26ல் தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பால் தமிழகத்தில் பரபரப்பு

தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்பி க்கள் உள்பட மொத்தம் 55 ராஜ்யசபா எம்பிகளுக்கு வரும் மார்ச் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

இதனை அடுத்து தமிழகத்தில் புதிய ராஜ்யசபா எம்பி ஆறு பேர் யார் என்பது குறித்து அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகிய 6 பேர் உள்பட நாடு முழுவதும் 55 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலம் விரைவில் முடிவடைகிறது

இதனை அடுத்து இந்த புதிய ராஜ்யசபா எம்பிகளை தேர்வு செய்ய அவர் மார்ச் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்றும் மார்ச் 13-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதியன்று மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

Leave a Reply