மார்ச் 22ஆம் தேதி ‘காஞ்சனா 3’ ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து

மார்ச் 22ஆம் தேதி ‘காஞ்சனா 3’ ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கிவிட்டது

முதல்கட்டமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடல் மார்ச் 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர்ஸ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளது

ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, கபீர்சிங், மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, சத்யராஜ், கிஷோர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Leave a Reply