மாமியார் வீட்டுக்கு விருந்து சென்றவர் போலீசாரால் கைது: காரணம் பட்டாக்கத்தி

மாமியார் வீட்டுக்கு விருந்து சென்றவர் போலீசாரால் கைது: காரணம் பட்டாக்கத்தி

திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்கு விருந்துக்குச் சென்ற புதுமாப்பிள்ளை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னையை அடுத்த திருவேற்காடு என்ற பகுதியில் சமீபத்தில் புவனேஷ் என்பவருக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது அவரது நண்பர்கள் பட்டாக் கத்தியை புதுமாப்பிள்ளை கையில் கொடுத்து கேக் வெட்டுமாறு கூறினார் அவரும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டினார்

இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனை அடுத்து திருமணம் முடிந்து மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு விருந்துக்குச் சென்ற புதுமாப்பிள்ளையை திடீரென போலீசார் கைது செய்தனர்

பட்டாக்கத்தியால் கேக் வெட்டியதால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் மணமகள் மற்றும் மணமகன் வீட்டார் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.