மாமியாருடன் திருமணம், மகளுடன் குடித்தனம்: குமரி இளைஞருக்கு ஏற்பட்ட நெருக்கடி!

மாமியாருடன் திருமணம், மகளுடன் குடித்தனம்: குமரி இளைஞருக்கு ஏற்பட்ட நெருக்கடி!

மாமியார் பெயரை பதிவுத்திருமண ஆவணத்தில் பதிவு செய்துவிட்டு அவரது மகளை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவருக்கு தற்போது புதுவித நெருக்கடி ஏற்பட்டுள்ளது

குமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் ப்ரீத்தி என்ற 15 வயது சிறுமியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமண வயதை ப்ரித்தி எட்டாததால் திருமண பதிவேட்டில் ப்ரித்தியின் தாயார் பெயர் பதிவு செய்யப்பட்டடு.

இந்த நிலையில் ரமேஷ்-ப்ரித்தி தம்பதியினர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோர்களாகிவிட்டனர். இந்த நிலையில் ப்ரித்தி திடீரென இன்னொரு இளைஞரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரமேஷ் கண்டித்தபோது, 15 வயதில் திருமணம் என்றால் என்னவென்றே தெரியாமல் தனது தாயாருக்காக திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது தனக்காக ஒரு திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கூறியதால் ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ரமேஷ் போலீசில் புகார் செய்தபோது ஆவணப்படி ரமேஷுக்கும் ப்ரித்தியின் தாயாருக்கும் தான் திருமணம் நடந்ததாக ஆவணங்கள் இருப்பதால் அவர்களால் ப்ரித்தி மீதும் அவரது காதலர் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.