நாடாளுமன்றத்தின் 15 வது மற்றும் இந்த ஆட்சியின் இறுதிக்கூட்டம் கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் ஆரம்பித்த நாளில் இருந்து ஒருநாள் கூட உருப்படியாக முழுமையாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை மாநிலங்களவை கூடியதும் ஒருபுறம் தெலுங்கானா பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என ஆந்திர மாநில எம்.பிக்கள் மைக்குகளை உடைத்து ரகளை செய்துகொண்டிருந்தனர். இன்னொரு புறம் தமிழக எம்.பிக்கள் தமிழக மீனவர் பிரச்சனையை எழுப்பியபடி அவையின் மையப்பகுதிக்கு சென்று கடுமையான குரலில் பேசிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் அதிமுக எம்.பி மைத்ரேயன், அவையின் மையப்பகுதிக்கு சென்று காகிதங்களை கிழித்து எறிந்து ரகளை செய்தார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மாநிலங்களவை துணைத்தலைவர் குரியன் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த ரகளை காரணமாக மாநிலங்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 2 மணிக்கு மாநிலங்களவை கூடியபோதும் கூச்சல், குழப்பம் தொடர்ந்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

Leave a Reply