மாத கட்டணம் ரூ.49ல் ஆப்பிள் டிவி: நெட்பிளிக்ஸ், அமேசானுக்கு ஆப்பு?

மாத கட்டணம் ரூ.49ல் ஆப்பிள் டிவி: நெட்பிளிக்ஸ், அமேசானுக்கு ஆப்பு?

அமேசான், நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் போன்ற டிஜிட்டல் டிவிக்கள் இந்தியாவில் புகழ்பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் புதிய அறிமுகமாக ஆப்பிள் டிவி இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த டிவியில் மாதக் கட்டணம் ரூபாய் 49 மட்டுமே. மேலும் நெட்பிளிக்ஸ், அமேசான் போன்று மற்ற நிறுவனங்களின் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களை இந்த டிவி ஒளிபரப்பாது. இந்த ஆப்பிள் டிவியில் முழுக்க முழுக்க தனது சொந்த தயாரிப்பு திரைப்படங்களை மட்டுமே பார்க்கலாம். இதற்காக சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாய் ஆப்பிள் நிறுவனம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
ஆனால் ஒரே ஒரு விஷயம் என்னவெனில் இந்த டிவியின் நிகழ்ச்சிகளை ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிள் ஐபோன், ஆப்பிள் ஐபேட், ஆப்பிள் லேப்டாப் ஆகியவற்றில் மட்டுமே காணமுடியும் என்பதும் ஆண்ட்ராய்ட் டிவியில் இதன் நிகழ்ச்சிகளை காண முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது

இருப்பினும் ஆப்பிள் டிவி எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு டிவிகளுக்கும் தெரியும் வகையில் நிகழ்ச்சிகளை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தற்போது அதிக கட்டணம் வசூல் செய்து வரும் நிலையில், மாதம் வெறும் 49 ரூபாய் கட்டணத்தில் ஆப்பிள் டிவி அறிமுகம் ஆகி இருப்பது இந்திய டிஜிட்டல் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published.