மாதக் கணக்கில் காரிலேயே சுற்றும் தம்பதிகள் பரபரப்பு தகவல்

காரிலேயே மாதக்கணக்கில் இந்தியாவை சுற்றி பார்த்து வரும் தம்பதிகள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

கேரளாவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் – லட்சுமி கிருஷ்ணா என்ற தம்பதிகள் பெங்களூரில் தங்கி பணியாற்றி வந்தனர்

இந்த நிலையில் திருமணம் முடிந்த பிறகு தேனிலவு செல்வதற்காக தாய்லாந்து சென்று வந்தனர்

அதன் பின் இந்தியா முழுவதும் சுற்றுலா செல்ல அவர்கள் முடிவு செய்தனர். இருவரும் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காரிலேயே இந்தியா முழுவதும் சுற்றி வருகின்றனர்

காரிலேயே இரவு தூக்கம் பெட்ரோல் நிலையங்களில் குளியல் மற்றும் சாலையோரங்களில் சமையல் என கிட்டத்தட்ட பல மாதங்களாக காரிலேயே இந்தியா முழுவதும் சுற்றி வருகின்றனர்

முதலில் இந்த பயணத்திற்காக 2.5 லட்ச ரூபாய் பணத்தை ஒதுக்கி வைத்துள்ளதாகவும், இன்னும் அந்த பணம் தங்களுக்கு செலவு செய்யவில்லை என்றும் முழு பணமும் செலவு செய்த பின்னர்தான் வீட்டுக்கு செல்ல முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்

தற்போது 120 நாட்களுக்கு மேலாக அவர்கள் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply