மாணவிகள் கழிவறையில் கேமிராவை ஒளித்து வைத்த பேராசிரியர்: சென்னை ஐஐடியில் பரபரப்பு

மாணவிகள் கழிவறையில் கேமிராவை ஒளித்து வைத்த பேராசிரியர்: சென்னை ஐஐடியில் பரபரப்பு

மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையில் செல்போன் கேமராவை மறைத்து வைத்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது சென்னை ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை ஐஐடியில் விண்வெளி பொறியியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் சுபம் பானர்ஜி என்பவர் சமீபத்தில் பெண்கள் கழிவறையிலிருந்து வெளியே வந்ததைப் பார்த்த மாணவி ஒருவர் சந்தேகம் அடைந்து உள்ளார்

இதனை அடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது செல்போன் ஒன்று கேமரா ஆன் செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

இதனை அடுத்து அவர் ஐஐடி நிர்வாகத்தின் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது உதவி பேராசிரியர் பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டார்

மேலும் இதற்கு முன் ஒரு சில தடவை இதேபோல் செல்போனில் வீடியோ படமெடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது அந்த உதவி பேராசிரியர் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply