மலைப்பாதை திருப்பத்தில் விபத்து: சுற்றுலா சென்ற ஐடி ஊழியர்கள் 9 பேர் பலி

மலைப்பாதை திருப்பத்தில் விபத்து: சுற்றுலா சென்ற ஐடி ஊழியர்கள் 9 பேர் பலி

ஐடி ஊழியர்கள் சென்ற பேருந்து மலைப் பாதை திருப்பத்தில் மலை இருந்ததை கவனிக்க தவறியதை அடுத்து நடந்த கோர விபத்தில் 9 பேர் பலியான பரிதாப சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

மைசூரை சேர்ந்த ஐடி ஊழியர்கள் 35 பேர் நேற்று முன்தினம் தனியார் பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்றனர். மங்களூரு மற்றும் சிக்மகளூர் சென்றுவிட்டு அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தபோது மலைப்பாதையில் ஒரு வளைவில் மலை இருப்பதை டிரைவர் கவனிக்கவில்லை

இதனையடுத்து அந்த பேருந்து மலையில் பயங்கரமாக மோதியது இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதியில் இருந்த 9 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி பலியாகினர் மேலும் 25 பேர் படு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மலைப்பாதையில் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.