மலேசிய பள்ளியில் பயங்கர தீவிபத்து. மாணவர்கள் உள்பட 25 பேர் பலி
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து ஒன்றில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 25 பேர் பலியானதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை ஐந்து மணிக்கு மலேசியாவில் உள்ள மத சம்பந்தப்பட்ட பள்ளி ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக 25 பலியானதாகவும், மலேசியாவின் தீயணைப்பு துறை அதிகாரி உறுதி செய்துள்ளார்.
பலியானவர்களின் உடல்கள் மருத்துவ பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும், இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் மலேசிய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.