மலிவு விலை நாப்கின் புகழ் முருகானந்தத்திற்கு ஜப்பான் தூதர் பாராட்டு

மலிவு விலை நாப்கினை தயாரித்து புகழ் பெற்ற முருகானந்தத்தின் கோவை தொழிற்சாலையை இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் கென்ஜி ஹிராமட்சு, தனது மனைவியுடன் நேரில் பார்வையிட்டார்.

மலிவு விலை நாப்கின் தயாரிப்பு குறித்து விளக்கங்களை கேட்டு அறிந்த ஜப்பான் தூதர் தங்கள் நாட்டிற்கு வரும்படி முருகானந்தத்திற்கு அழைப்பு விடுத்தார். இத்தகைய தொழில்நுட்பத்தை ஜப்பானிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கென்ஜி கேட்டு கொண்டார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற முருகானந்தத்தின் புகழ் உலக அளவில் பரவி வருகிறது. அவரது நாப்கின் தொழிற்சாலையை பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ அண்மையில் நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply