மறைந்த முன்னாள் அமைச்சர் சுஷ்மாவின் உடல் இன்று அடக்கம்

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் நேற்று நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று காலை 11 மணிவரை அவரது இல்லத்தில் வைக்கப்படுகிறது. மீண்டும் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியினர் மரியாதை செலுத்த வைக்கப்படும் என்றும், இதனை அடுத்து லோதி சாலையில் உள்ள மயானத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெறும் என்றும் பாஜக செயல் தலைவர் தெரிவித்துள்ளார்

முன்னதாக மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுக்கு குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். சுஷ்மாவின் குடும்பத்தினர்களுக்கும் அவர்கள் ஆறுதல் கூறினர்

Leave a Reply