மறப்போம் மன்னிப்போம் கொள்கையை கடைபிடிப்போம்: எடியூரப்பா

எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு இன்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஈடுபட உள்ள நிலையில் இன்று எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாது என்றும், மறப்போம் மன்னிப்போம் என்கிற கொள்கையை கொண்டவர்கள் நாங்கள் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் தனது அரசு பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்களை பெற்றுள்ளதாகவும் பெரும்பான்மையில் பாஜக அரசு நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்

14 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிடும் என்று கருதப்படுகிறது

Leave a Reply