மருமகனை திருமணம் செய்து கொண்ட மாமியார். மகளே நடத்தி வைத்து புரட்சி

மருமகனை திருமணம் செய்து கொண்ட மாமியார். மகளே நடத்தி வைத்து புரட்சி

இங்கிலாந்து நாட்டின் லண்டனை சேர்ந்தவர் லாரன் வால் என்ற இளம்பெண்ணுக்கு அவரது தாயார் ஜூலி, பால் ஒயிட் என்ற இளைஞருக்கு கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். மகளும், மருமகனும் தேனிலவு செல்ல கிளம்பியபோது, லாரன் வால், தனது தாயார் தனிமையில் இருப்பாரே என பரிதாபப்பட்டு தங்களுடன் வருமாறு அழைத்தார். புதுமண தம்பதிகள் தேனிலவு செல்லும்போது தானும் உடன் சென்றால் இடைஞ்சலாக இருக்கும் என கருதிய ஜூலி முதலில் வரமுடியாது என்று மறுத்துள்ளார். ஆனால் மகள் கட்டாயப்படுத்தியதை அடுத்து இளம் தம்பதிகளுடன் ஜூலியும் உடன் சென்றார்.

தேனிலவு சென்ற இடத்தில் தனது தாய் ஜூலிக்கும் தனது கணவருக்கும் நடந்த ஆபாச உரையாடல்களை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஓரிரு நாளில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை, திடீரென திருமண மோதிரத்தை கழற்றிப் போட்டுவிட்டு தன் மாமியார் ஜூலியுடன் தனி வீட்டில் குடிபுகுந்துவிட்டார் பால் ஒயிட்

மேலும் ஓரிரு வருடங்கள் கழித்து ஜூலி-பால் ஒயிட் திருமணம் முறைப்படி நடந்தது. இந்த திருமணத்தை லாரன் வால் வேறு வழியின்றி நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணம் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்தாலும் பத்து ஆண்டுகள் கழித்து இப்போதுதான் சமூக வலைத்தளம் மூலம் வெளியுலகிற்கு தெரிவித்துள்ளார் லாரன் வால்.

Leave a Reply