மருத்துவமனையில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் திருட்டு: பெரும் பரபரப்பு

நாடு முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் திருட்டு போய் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தின் தாமோ என்ற மாவட்ட மருத்துவமனையில் நோயாளிகளுக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்

மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு உள்ள நிலையில் தற்போது சிலிண்டர்கள் திருடப்பட்டதாக ஆட்சியர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply