மருத்துவக் கல்லூரி உரிமையாளரின் மகளாக இருந்தாலும் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும்: தமிழிசை

மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன், நீட் தேர்வு அவசியம் தேவை; மருத்துவக் கல்லூரி உரிமையாளரின் மகளாக இருந்தாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக ஆக முடியும்” என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தேவையா தேவையில்லையா என்ற வாதம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றே தீருவோம் என தமிழக அரசு கூறிவரும் நிலையில் புதுவை ஆளுநரின் இந்த காருக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது