மரத்திலிருந்து கொட்டிய நீர்

tree-water

மதுரை பைபாஸ் ரோடு துரைச்சாமிநகர் செல்லும் வழியில் உள்ள ஒரு மரத்தின் பக்கவாட்டில் 3 அடி உயரத்திலிருந்து கொட்டிய நீரை காண பொதுமக்கள்குவிந்தனர்.

மரத்தில் இருந்து கொட்டிய நீரை மக்கள் வீடியோ, போட்டோஎடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பினர்.

சிறிது நேரத்தில் நீர் குறைந்து முற்றிலும் நின்றது.மாநகராட்சி இளநிலை பொறியாளர் அருள் சகாய சேவியர் கூறியதாவது:

மாநகராட்சி குடிநீர் குழாய் மெயின் லைனில் நீர் கசிவு இருந்ததால் அழுத்தம் தாங்காமல் மரத்திற்குள் சென்றுள்ளது.

மரத்திற்குள் கூடு போல் துளை இருந்ததால்தண்ணீர் ஊடுருவி பக்காவாட்டு துளை வழியாக கொட்டியுள்ளது என்றார்.