மயாங்க் அகர்வால் இரட்டைச்சதம்: இந்தியா அசத்தல்

இந்தியா, வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இந்தூரில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது

இந்திய அணி சற்றுமுன் வரை 106 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 418 ரன்கள் எடுத்துள்ளது. மயாங்க் அகர்வால் இரட்டைச்சதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். அவர் முச்சதம் அடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

மேலும் ரஹானே 86 ரன்களும், புஜாரே 54 ரன்களும் அடித்துள்ள்னார். ஜடேஜா 32 ரன்களுடன் ஆடி வருகிறார். ரோஹித் சர்மா 6 ரன்களிலும், விராத் கோஹ்லி ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய அணி தற்போது 274 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply