மயக்கமடைந்த காக்கையும் தாகம் தீர்த்த மனிதரும்

மும்பை அருகே சாலையில் பைக் ஒன்றில் இளைஞர் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒரு காக்கா மயக்கமடைந்து கீழே விழுந்து கிடப்பதைக் கண்ட அவர் உடனே பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து காகத்தின் மீது தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தார்

அதன் பின் பாட்டிலில் இருந்து தண்ணீரைக் காக்கைக்கு குடிக்கக் கொடுத்தார். இதனை அடுத்து மயக்கம் தெளிந்த காகம் சந்தோஷமாக பறந்து சென்றது

அனைத்து உயிர்க்கும் அன்பு செலுத்தும் மனிதர்களும் இந்த உலகில் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்து கொண்டிருப்பதாக இந்த வீடியோவை பார்த்த பலரும் கருத்து கூறி வருகின்றனர்

Leave a Reply