மன்மோகன் சிங் பாதுகாப்பில் திடீர் மாற்றம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும் அவருக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் பிரதமர்களுக்கு வழக்கமாக எஸ்.பி.ஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில் மன்மோகன்சிங் அவர்களுக்கும் இதுவரை எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு என மாற்றப்பட்டது. சமீபத்தில் மன்மோகன்சிங் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply