மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்: கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு

மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்: கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு

மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் ஒருவரை கணவர் கொலை செய்த சம்பவம் கோவில்பட்டி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோவில்பட்டி அருகே கயத்தாறு என்ற பகுதியில் உள்ள விஜயன் என்பவரது மனைவி குளித்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த மில்டன் ராஜ் என்பவர் வீடியோ எடுத்ததாக தெரிகிறது

இதனையடுத்து அந்த வீடியோவை வைத்து கணவன், மனைவி ஆகிய இருவரையும் மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென ஒருநாள் சர்ச்சுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மில்டன்ராஜ் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் தேடியபோது விவசாய நிலத்தில் அவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது
இதனையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை செய்த போது மில்டன் ராஜுக்கும் விஜயனுக்கும் முன்பகை இருந்தது தெரியவந்தது. மேலும் விஜயனுக்கு மில்டன் ராஜ் கடைசியாக போன் செய்திருந்தார் என்பதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து விஜயனை போலீசார் விசாரித்தபோது அவர் மில்டன் ராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தன்னுடைய மனைவி குளிக்கும்போது வீடியோ எடுத்து தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதால் தனது நண்பர்கள் உதவியுடன் அவரை கொலை செய்துவிட்டு அந்த வீடியோவையும் டெலிட் செய்து விட்டதாக கூறினார்

இதனை அடுத்து விஜயன் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபரை கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published.