மனைவி இறந்தவுடன் மாமியாரை திருமணம் செய்த இளைஞர்? திடுக்கிடும் தகவல்

மனைவி இறந்தவுடன் மாமியாரை திருமணம் செய்த இளைஞர்? திடுக்கிடும் தகவல்

அசாம் மாநிலத்தில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அவருடைய மனைவிக்கு தாயார் மட்டுமே இருந்ததால் அவரையும் தன்னோடு வீட்டில் உதவிக்காக வைத்து இருக்கின்றார்

இந்த நிலையில் சமீபத்தில் அந்த வாலிபரின் மனைவி கர்ப்பம் அடைந்து டெலிவரிக்கு தயாரானார். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த அவருடைய மனைவி, எதிர்பாராதவிதமாக மரணமடைந்துவிட்டார்

இதனை அடுத்து கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு இருக்கும் மாப்பிள்ளைக்கு உதவியாக அவருடைய மாமியாரும் தொடர்ந்து அதே வீட்டில் தங்கி இருந்துள்ளார். ஆனால் இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தவறாக பேசியதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது

ஆனால் அந்த வாலிபருக்கு நெருக்கமான நண்பர்கள் இதனை மறுத்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது வதந்தி என்றும், தாய்-மகன் உறவில் தான் இருவரும் ஒரே வீட்டில் இருக்கின்றார்கள் என்றும், அந்த உறவை கொச்சைப்படுத்தும் விதமாக அபாண்டமான புகார்களைக் யாரும் சொல்லவேண்டாம் என்றும் கூறியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.