சிரோமணி அகாலி தள கட்சியின் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் மத்திய அரசில் இருந்து அக்கட்சி வெளியேறுமா? என்ற கேள்வி எழுந்தது

ஆனால் சிரோமணி அகாலிதளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கும் என்றும் கூட்டணியில் இருந்து விலகாது என்றும் அக்கட்சியின் தலைவர் சுக்பீர்சிங் பாதல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று 3 புதிய விவசாய மசோதாக்களை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தார்.

ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் நேற்று ஏற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply