மத்திய அமைச்சரவையில் அதிமுக: அமைச்சர் தகவல்

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது தமிழகத்திலிருந்து ஒரே ஒரு அதிமுக உறுப்பினர் மட்டுமே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதி எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டதால் அவருக்கு அப்போதே மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது அதிமுக மத்திய அமைச்சர் பதவி பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இருப்பினும் அதிமுக தொண்டனாக இதனை கூறுவதாகவும் ஆதாரப்பூர்வமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply