மதுரை மத்திய சிறையில் போலீசார்-கைதிகள் மோதல்: பெரும் பரபரப்பு

மதுரை மத்திய சிறையில் போலீஸாருக்கும் சிறைவாசிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீசார்களின் நடவடிக்கைகளை கண்டித்து சிறையின் மதில்சுவர் மீது ஏறி நின்று சிறைவாசிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறை அதிகாரிகள் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

போலீசார்-கைதிகள் இடையே நடைபெறும் போராட்டத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply