மதுரை தேர்தலை தள்ளி வைக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி!

மதுரை தேர்தலை தள்ளி வைக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி!

மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய 3 மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதே தேதியில் மதுரையில் சித்திரை திருநாள் விழா நடப்பதை காரணம் காட்டி தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என பொதுநல மனுக்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது

இந்த வழக்கின் விசாரணையின்போது சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்றும், இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடத்த அனுமதிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் பதிலளித்தது

இந்த நிலையில் இன்று மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய 3 மனுக்களையும் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Leave a Reply