மதுரை-சென்னை இடையே அதிவேக சிறப்பு ரயில்:

மதுரை – சென்னை விரைவில் அதிவேக ரயில்கள் இயக்கவுள்ளதால் அதற்கான சோதனை தற்போது நடைபெற்றுள்ளது.

சென்னை – மதுரை இருவழி ரயில் பாதையில் ‘ஆசிலேஷன் மானிடரிங் சிஸ்டம் மூலம்’ சிறப்பு ரயில் விரைவில் இயங்கவுள்ளது. இந்த ரயில் 135 முதல், 140 கி.மீ., வேகத்தில் செல்லும்

இந்த ரயிலின் சோதனை நேற்று நடந்தது. காலை, 8:30 மணியளவில், மதுரையில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், 10:20 மணிக்கு திருச்சிக்கும், பகல், 11:30 மணியளவில், விருத்தாசலம் ரயில் நிலையத்தையும் கடந்து சென்றது.

விரைவில் இந்த ரயில் பயணிகளுக்காக இயங்கும் என்றும் அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.