மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு

மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுங்கச்சாவடி ஊழியர்களை நோக்கி சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த துப்பாக்கியால் சூடு காரணமாக யாருக்கும் காயம் இல்லை என்றும், இதுகுறித்த விசாரணைக்கு பிறகு எஸ்.பியிடம் அறிக்கை பெறப்படும் என்றும் மதுரை ஆட்சியர் ராஜசேகர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில், கட்டணம் செலுத்த மறுப்பு தெரிவித்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், சுங்கச்சாவடி ஊழியர்களை மிரட்டிய சிவக்குமார் என்பவரை கைது செய்து திருமங்கலம் போலிஸார் விசாரணை செய்து வருவதாகவும் தற்போது வெளிவந்துள்ள செய்தி தெரிவிக்கின்றன

Leave a Reply