மதுரையில் மட்டும் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பா?

மதுரையில் மட்டும் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பா?

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர்தல் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது

இந்த நிலையில் மதுரையில் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க தயார் என மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் நடராஜன், மதுரையில் மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு அனைத்துக்கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. சித்திரை விழா நடக்கும் சூழலில் ஏப்ரல் 18-ல் மதுரையில் தேர்தல் நடத்த வேண்டாம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் மதுரையில் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க தயாராக உள்ளோம்.

தேரோட்டம் மதியம் 12 மணிக்கு முடிந்துவிடும் என்பதால் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க தயார். சித்திரை திருவிழா தொடர்பான உள்ளூர் விடுமுறை குறித்து மட்டுமே கேள்வி கேட்கப்பட்டதால் ஏப்ரல் 19 பற்றி தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.