shadow

மணிமேகலை காதலுக்கு ராகவா லாரன்ஸ் காரணமா?

பிரபல விஜே மணிமேகலை முஸ்லீம் இளைஞர் ஹூசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிந்ததே. மணிமேகலையின் தந்தை இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நண்பர்கள் மற்றும் ஹூசைன் உறவினர்கள் முன் இந்த திருமணம் எளிமையாக ரிஜிஸ்தர் ஆபீசில் நடந்தது

இந்த நிலையில் ஹூசைன் மீது தனக்கு ஏற்பட்ட காதல் குறித்து மணிமேகலை மனம் திறந்து கூறுகையில், ‘ஒருநாள் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ஆடலுடன் பாடலை பார்த்த போது லாரன்ஸ் மாஸ்டருடன் ஆடிய டான்சரை கவனித்தேன்.

இவரை பாராட்ட வேண்டும் என்று நினைத்து நம்பர் வாங்கி பேசினேன். பிரபல தொகுப்பாளினி என்பதால் கொஞ்ச நேரமாவது பேசுவார் என்று நினைத்தால் நன்றி என்ற ஒரே வார்த்தையில் கட் பண்ணிட்டார்

இந்த குணம் பிடிச்சு அப்புறமா அவருடன் தொடர்ந்து பேசி பழகினேன். ஒருநாள் அவரை ஹைதராபாத்துக்கு காரில் தனியாக போய் சந்தித்து காதலை சொன்னேன். அப்புறமாக தான் அவர் ஒத்துக்கிட்டார்.

ஆனால் என் அப்பா, ஹசைன் வேறு மதம் என்பதால் எனக்கு வேறு வரன் பார்த்ததால் அவசர திருமணம் செய்ய வேண்டியதாகிவிட்டது என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *