மணமகளின் படுக்கையறை வீடியோவை வெளியிட்ட மணமகன்: திருமண மண்டபத்தில் பரபரப்பு

திருமணம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணமகன், தான் திருமணம் செய்யவிருக்கும் மணமகள் கள்ளக்காதலனுடன் படுக்கை அறையில் இருந்த வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தெற்கு சீனாவை சேர்ந்த ஒரு 25 வயது இளைஞர் ஒருவருக்கும் 23 வயது பெண்ணுக்கும் திருமணம் நடந்து கொண்டிருந்தது. இந்த திருமணத்திற்கு இருவீட்டாரின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த தயாராகினர்

மணமகன் மணமகளுக்கு மோதிரம் மாற்றுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் திடீரென அங்கிருந்த திரை ஒன்றில் வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அந்த வீடியோவில் மணமகள் கோலத்தில் இருந்த பெண், கள்ளக்காதலன் ஒருவனுடன் படுக்கை அறையில் ஆபாசமாக இருந்த காட்சி திரையிடப்பட்டது.

இதனால் மணமகள் குடும்பத்தினர் உட்பட திருமண வீட்டார் மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மணமகளுக்கு ஏற்கனவே கள்ளக்காதலன் இருப்பதாக நண்பர் மூலம் அறிந்த மணமகன், அதனை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்து மணமகளை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே திருமண நாளில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது

இந்த வீடியோ வெளியானதால் அதிர்ச்சியடைந்த மணமகள் ஆத்திரத்துடன் மணமேடையை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply