மஞ்சள் பத்திரிகையாளர்கள்: வலைப்பேச்சு குறித்து நடிகர் சித்தார்த்

அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்த பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள் இந்த படத்தை போற்றிப் புகழ்ந்து விமர்சனம் எழுதி வருகின்றனர். ஆனால் வலைப்பேச்சு என்ற யூடியூப் சேனல் நடத்தும் 3 பேர் மட்டும் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்ததோடு, பெண்கள் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டனர். இதனால் பெரும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில் வேறுவழியின்றி மூவரும் தங்களுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டனர்

இந்த நிலையில் இந்த பத்திரிகையாளர்கள் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சித்தார்த், ‘வலைப்பேச்சு குழுவினர் எப்பொழுதும் ஒரு அசிங்கமான கல்வியறிவற்றவர்கள் ஆகவே இருந்து வருகின்றனர். .அவர்கள் மஞ்சள் பத்திரிகையாளர்கள் போல் நடந்து கொள்கின்றனர். அவர்களுடன் விவாதிப்பது காலவிரயம் தான். மற்ற பத்திரிக்கையாளர்கள் இவர்கள் போன்ற பத்திரிக்கையாளர்களை தள்ளிவைப்பது நல்லது. இவர்களை பத்திரிகையாளர்கள் என்று கூறுவதே தவறு. ல் பத்திரிகை துறையை இம்மாதிரி நபர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று தெரிவித்துள்ளார்

சித்தார்த்தின் இந்த கருத்தை பத்திரிகையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

Leave a Reply